Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 20 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், எச்.தாலிப் அலி ஏகமானதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில், தம்பலகாமம் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று (20) நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, சக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், ஏகமானதாக தாலிப் அலி தெரிவானார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உப தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார முன்மொழிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் எம்.ஐ.றிகாஸ் வழி மொழிந்தார்.
சபையில் மொத்தமாக தவிசாளர் உட்பட 16 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை
மேற்படி சபை அமர்வில், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தென்னக்கோன், தம்பலகாமம் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.நிர்மலநாதன் உட்பட பலர் பங்கேற்றார்கள்.
தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட தாலிப் அலி, இதற்கு முன்னரும் மூன்று முறை தம்பலகாம பிரதேச சபையில் தவிசாளராகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
5 hours ago