2025 மே 01, வியாழக்கிழமை

தளபாடத் திருத்தத்துக்கு ரூ.40 மில். நிதியொதுக்கீடு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் தளபாடத் திருத்தத்துக்காக மாகாண அபிவிருத்தி நிதியிலிருந்து இவ்வருடம் 40 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின்  17 கல்வி வலயங்களிலும்  உள்ள மாகாணப் பாடசாலைகளில் சேதமடைந்துள்ள தளபாடங்களைத் திருத்துவதற்காக  இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. 

இதில் வலயங்களுக்கான நிதியொதுக்கீடு தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் தளபாடப் பற்றாக்குறையில் ஒரு பகுதி நிவர்த்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தம்பலகாமம்  அல்ஹிக்மா மகா வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம், மூதூர் அல் பலாஹ் வித்தியாலயம், புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம், குச்சவெளி அந் நூறியா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மீள்குடியேற்ற அமைச்சால் 79  மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .