2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகரசபை அமர்வை, பொதுமக்கள் கலரியில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த நகர சபை  உறுப்பினர் ஒருவரின் பிரத்தியேக செயலாளரை, அங்கிருந்து  பலாத்காரமாக  வெளியேற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  அடிப்படை மனித உரிமை மீறலின் கீழ், வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

திருகோணமலை, ஜமாலியா வீதியை வசிப்பிடமாகக் கொண்டவரும் திருகோணமலை நகரசபையின் உறுப்பினர் ஆர்.எம்.றவூப் என்பவரின் பிரத்தியேகச் செயலாளருமான கே. ஸ்ரீகரன் என்பவரே, இந்த அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாட்டைச் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக சட்டத்தரணி ஏ.சி.எம் இப்றாஹிம் மூலம்,  திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான முன்னறிவித்தல் கடிதம்,   நேற்று (17) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2018.11. 27ஆம் திகதி நடைபெற்ற நகரசபை அமர்வின் போதே, இந்த அடிப்படை மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, நாளை (18) நடைபெறவுள்ள 9ஆவது சபை நடவடிக்கைகளை பார்வையிட காலை 9 மணி தொடக்கம் 10 மணி வரை ஒரு மணித்தியாலம்  மட்டுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டமையும் அடிப்படை மனித உரிமை மீறலாகும் எனவும், மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X