2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தவிசாளர் – நூலக வாசகர்கள் சந்திப்பு

Editorial   / 2018 நவம்பர் 03 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா  பொது நூலக சிரேஷ்ட நலன்புரி சங்கத்தினருக்கும் கிண்ணியா பிரதேச புதிய தவிசாளர் எம்.எச். சனூஸ்க்கு இடையிலான சந்திப்பு, கிண்ணியா பிரதேச சபை நூலகத்தில் இன்று (03) இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, கிண்ணியா பிரதேச சபை பொது நூலகத்தின் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட நலன்புரிச் சங்கத்தில் புதிய தவிசாளரை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்குடனும், நூலகத்தை நவீனமயப்படுத்தும் நோக்குடன் விரிவான கலந்துரையாடல்  இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச சபை நூலகத்தை ஒரிரு வாரத்துக்குள் வாசகர் நலன் கருதி  கவர்ச்சிகரமாக செய்ய வேண்டிய வேலைகளை கூறுங்கள் அதனை செய்து தருவதாகவும் தவிசாளர் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X