2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தாபரிப்பு பணம் செலுத்தாதவருக்கு சிறை

எப். முபாரக்   / 2017 நவம்பர் 16 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 35,000 ரூபாய் தாபரிப்புப் பணம் செலுத்தாத நபரொருவருக்கு, மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.

கந்தளாய், வட்டுக்கச்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே, இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருமணம் முடித்து, இரண்டு பிள்ளைகளுக்கு மாதாந்தம் 8,750  ரூபாய் செலுத்தி வந்த நிலையிலே, நான்கு மாதங்களாக 35,000 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தாது, தலைமறைவாக இருந்துள்ளார்.

இதனையடுத்து, மனைவி வழங்கிய முறைப்பாட்டுக்கமைய, குறித்த நபர், கந்தளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X