எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு இலட்சம் ரூபாய் தாபரிப்புப் பணத்தைச் செலுத்தாத நபரை, இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (02) உத்தரவிட்டார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த நபர், திருமணம் முடித்து, இரண்டு பிள்ளைகளுக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் தாபரிப்புப் பணம் செலுத்தி வந்துள்ளார்.
எனினும், கடந்த 10 மாதங்களாகத் தாபரிப்புப் பணத்தை செலுத்தாது தலைமறைவாகியிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
31 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
49 minute ago