2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திடீரென சுகவீனமுற்ற சிறுவன் மரணம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம் .றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீட்

திடீரென சுகயீனம் ஏற்பட்ட 13 வயதுச் சிறுவன், கிண்ணியா தள வைத்தியசாலையில் இன்று (30) அதிகாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

திருகோணமலை - கிண்ணியா, நடுவூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு குட்டியாகுளம் பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அஜ்மி என்ற சிறுவனே இவ்வாறு மரணித்துள்ளார்.  

சிறுவனுக்கு உடலில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குச் சென்றதாகவும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது உயிரிழந்த நிலையிலேயே சிறுவன் இருந்ததாக, வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர். 

இது தொடர்பில் கிண்ணியா தள வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம் ஜிப்ரி தெரிவிக்கையில், “சிறுவனை, வைத்தியசாலைக்குக் கொண்டு வந்த உறுவினர்கள், அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறினார்கள். அந்நேரத்தில் பொறுப்பாக இருந்த வைத்தியர் சோதனை செய்த போது, அச்சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துள்ளார்” என்றார்.

ஆனாலும்,  மரணத்துக்கான காரணம் எதுவும் தெரியாதமையால் சிறுவனின் சடலம், தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் திடீரென மரணித்தமையை அடுத்து கிண்ணியா தள வைத்தியசாலையில் பதட்ட நிலைமை ஏற்பட்டிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X