Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2019 ஜனவரி 04 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோணேஸ்வரர் ஆலயக் கடைகள் விவகாரத்தில், அரச திணைக்களங்கள் மீது பொதுமக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படும் விதத்தில் சம்பவங்கள் இடம்பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திலுள்ள கடைகளை, அவ்விடத்திலிருந்து அகற்றி, மலையடிவாரத்தில் அமைப்பது தொடர்பாக, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நேற்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கும் போது, திருக்கோணேஸ்வரர் அலயத்தின் அன்னதான மடம் அமைக்க அங்கிருந்த மரத்தை வெட்டிய போது, அதற்கு நான்கு திணைக்களங்கள் செயற்பட்ட விதமும் ஆலயத்துக்கு அருகாமையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதும் அதனால் ஏற்படும் இயற்கை சமநிலை சீர்குலைவுக்கு இத்திணைக்களங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், எவரையும் பாதிப்பக்குள்ளாக்குவது எவரின் நோக்கமும் அல்ல எனவும் ஆலயத்தின் புனிதத்தன்மையும் ஆலய தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கு அமைதியான சூழ்நிலையும் ஏற்பட வழிவகுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
“இந்த ஆலயம் விஜயன் காலத்துக்கு முற்பட்டது. இதன் தோற்றம் வளர்ச்சி தொடர்பில் இலங்கையர் மட்டுமல்ல உலக வாழ் இந்துக்கள் அவதானித்து வருகின்றனர்.
“எனவே, இந்தக் கடைகளை அகற்றுவது தொடர்பிலுள்ள சின்னச் சின்ன சிக்கலை நாம் சுமூகமாகத் தீர்த்து, அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுக்க வேண்டும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago