Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான் ஒருபோதும் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்கமாட்டேன். நாட்டை காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது, எனது நோக்கமானது எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதேயாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று(12) பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய ஊழியர்களில் அரசியல் பழிவாங்களுக்குள்ளான ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களின் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பனை செய்வது தொடர்பான கருத்துக்கு பதில் கூறும் முகமாகவே பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'நாங்கள் தவறு செய்திருந்தால் அதனைத் திருத்தவே முயற்ச்சி செய்கின்றோம். கடந்த ஆண்டு சிறந்த முறையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நிர்வகித்துள்ளோம், பதவிக்கு வந்த பிறகு கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்று வந்த முறைகேடுகளை நிறுத்தியுள்ளோம்.
குறிப்பாக, தரமற்ற எரிபொருள் கலப்பு மற்றும் டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதை தடுத்து நிருத்தியுள்ளோம். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்கள் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை விற்பது தொடர்பாக குற்றம்சாட்டியுள்ளார்.
நானும் எனது அமைச்சின் செயலாளரும் இதுபோன்ற பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். எங்களால் மற்றவர்களின் விருப்பத்திற்கினங்க செய்றபட முடியாது' என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
2 hours ago
2 hours ago