Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை நகர சபை மிக விரைவில் மாநகர சபையாக தயமுயர்த்தப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
புனரமைப்பு செய்யப்பட்ட திருகோணமலை நகர சபை கட்டிடத்தை கடந்த வௌ்ளிக்கிழமை (15) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை நகரை அழகிய நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் திருகோணமலையில் உள்ள அனைத்து வளங்களையும் பாதுகாப்பது எமது கடமையாகவுள்ளது.
திருகோணமலை முக்கிய கேந்திர நிலையமாக உள்ளது இதனை. எதிர்காலத்தில் மேலும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
அத்துடன் இங்குள்ள இயற்கை வளங்களை அபகரிக்க யாருக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்த ஆளுநர், வளங்களை பாதுகாப்பதற்காக அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். திருகோணமலையில் வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையாகவும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago