Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
திருகோணமலை நகராட்சிமன்றப் பகுதியில் இனங்காணப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களில், நான்கு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த சபையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய, காந்திநகர் பகுதியிலுள்ள நகரசபைக்குரிய காணியில் 02 மாடிக் கலாசரா மண்டபமொன்றை அமைத்து, அதன் மேல் மாடியில் நூலகமும், சனசமூக நிலையமும் அமைக்கப்படவுள்ளது. இவற்றுக்கான செலவீனமாக 7.1 மில்லியன் ரூபாய் நிதி, மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சிலிருந்து பெறப்பட்டுள்ளது.
அத்துடன், பெரிய கடை சந்தையிலுள்ள தனிமாடி சந்தைக் கட்டடம் அகற்றப்பட்டு, 03 மாடிக் கட்டம் கட்டுவதற்கு சபையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக சபை நிதியிலிருந்து நிதி பெறப்படவுள்ளது.
மேலும், வீரநகர் பகுதியிலுள்ள நகரசபைக்குரிய காணியில் 03 மாடி படகுத் தரிப்பிடம் அமைக்கப்படவுள்ளதுடன், திருக்கடலூர் பகுதியில் ஏற்கெனவே வெளிச்சவீட்டுக்கு இடப்பட்ட அத்திபாரத்துக்கு அருகில் ஒரு வெளிச்சவீட்டு கோபுரமொன்று அமைக்கப்படவுள்ளது.
குறித்த நான்கு திட்டங்களும் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன என நகரசபை அறிவித்துள்ளது.
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago