2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை பிரதேச சபை செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 12 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபை உட்பட  ஐந்து பிரதேச சபைகளின் செயலாளர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதென,  கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) ஜே.ஜே.புரளிதரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவின் பணிப்புரையின் பேரில் நாளை திங்கட்கிழமை (13) முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை - மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்விடமாற்றம் அமுல் படுத்தப்படவுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்திலும் இவ்விடமாற்றம் நடைபெறவுள்ளதாகவும் பிரதி பிரதம செயலாளர் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச சபை செயலாளர் எஸ்.நிர்மலநாதன், விவசாய அமைச்சுக்கும்; திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபையின் செயலாளர் மாலனி அசோக்குமார், குச்சவெளி பிர​தேச சபைக்கும்; கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.ஜே.எம்.அன்வர், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

கன்தளாய் பிரதேச சபை செயலாளர்  அசங்க உடகெதர, பதவிசிறி புர பிரதேச சபைக்கும்; பதவி சிறிபுர பிரதேச சபையின் செயலாளர் சாகர மெதவத்த, மொறவெவ பிரதேச சபைக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், மொறவெவ பிரதேச சபையின் செயலாளர் ஜூட் ராஜசிங்கம், கிழக்குமாகாண பேரவை செயலகத்துக்கும்; பேரவை செயலக நிர்வாக உத்தியோகத்தர் பாமினி ஜெகதீஸ்வரா, திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபைக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X