Freelancer / 2023 மே 26 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
திருகோணமலை மாவட்ட செயலகம், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில், தனிநபர்களின் சட்ட ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது மற்றும் வேறு சட்ட உதவிகளை வழங்குவதற்குமான நடமாடும் சேவை, திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (26) காலை 09 மணிக்கு ஆரம்பமானது. இது இன்று மாலை 04மணி வரை நடைபெறும்.
இந்தியாவிலிருந்து வருகை தந்து மீண்டும் குடியிருக்கும் இலங்கை அகதிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை
நோக்காகக் கொண்டு, ஜனாதிபதி சட்டத்தரணி நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றலுடன் இந்நடமாடும் சேவை நடத்தப்படுகின்றது.
ஏனையவர்களும் இந்த நடமாடும் சேவையில் பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்வது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவ் ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வது, திருத்தம் செய்வது மற்றும் காணாமல் போன அடையாள அட்டைகளுக்கான இரண்டாவது பிரதியை வழங்குவது தொடர்பான சேவைகளை வழங்குதல், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு காணுதல் போன்ற சேவைகளை பெறலாம்.
அத்துடன், இழப்பீடுகளுக்கான நட்டஈட்டை பெற்றுக்கொள்வது தொடர்பாக விண்ணப்பித்தவர்களின் கோவைகளில் காணப்படும் குறைபாடுகளை பூர்த்தி செய்தல், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடாத்துதல் மற்றும் அவ் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்தல், மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை நடத்துதல், காணி தொடர்பாக விசேட மத்தியஸ்த சபை தொடர்பான விழிப்புணர்வு வழங்குதல், சட்ட ஆலோசனையை வழங்குதல் மற்றும் சட்ட ஆலோசனை முகாமினை நடத்துதல் உள்ளிட்ட பல சேவைகள் இடம்பெறுகின்றன. (N)
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025