Princiya Dixci / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீட், ஒலுமுதீன் கியாஸ், அ.அச்சுதன், எஸ்.எல்.நௌபர், எஸ்.எல்.நௌபர், தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தரான ஜே.எஸ்.அருள்ராஜ், தமது கடமைகளை, மாவட்டச் செயலகத்தில் இன்று (1) பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர், 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.
கிண்ணியா, சேருவல பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகவும் இணைந்த வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்களப் பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையை பதவியேற்க முன்னர் இவர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025