2025 ஜூலை 31, வியாழக்கிழமை

திருகோணமலை விபத்தில் இருவர் காயம்

Janu   / 2025 மே 25 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக வீதியின் சந்திக்கு அருகே  மினிவேனும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   

மினிவேனை செலுத்தி வந்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .