2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

திருகோணமலைக்கு அமைச்சர் நாமல் விஜயம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஈம்.ஏ.பரீட்

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு,  திருகோணமலை  மாவட்டத்துக்கு இன்று  (22) காலை விஜயம்  செய்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரளவின் அழைப்பையேற்று, இந்த விஜயம் இடம்பெறுகிறது.

இதன்போது, அமைச்சர் நாமல், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.  

மொரவெவ, குச்சவெளி – நாவச்சோலை, வெள்ளமணல், தம்பலகாமுவ 96, கந்தளாய் - லீலரத்னே உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் மற்றும் பல வீதிகளையும் திறந்துவைக்கவுள்ளதுடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

கடற்படை முகாம், திருகோணமலை பொது வைத்தியசாலை, கந்தளாய்  சீனி  ஆலை என்பவற்றையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார்.

மேலும், மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கல் நிகழ்வொன்றும் கந்தளாய் பிரதேச மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X