Editorial / 2019 மார்ச் 25 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
முன்னாள் ஜனாதிபதி, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத் தலைவி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, திருகோணமலைக்கு, நாளை மறுதினம் (27) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
திருகோணமலையிலுள்ள சில பிரதேச செயலகங்களில் அபிவிருத்தித் திட்டங்களை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காகவே, இவரது இவ்விஜயம் அமையவுள்ளது.
இதன்போது குச்சவெளி, மொரவெவ, கோமரங்கடவல போன்ற பிரதேச செயலங்களில் கிணறு, வீதி, குளங்கள் உள்ளிட்டவற்றை மக்களின் பாவனைக்குக் கையளிக்கவுள்ளார்.
அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத் தகவல் உத்தியோகத்தர் எஸ் எம்.றஸீன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் 1,500 குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .