2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருகோணமலையில் 17 புதிய தொற்றாளர்கள்

Princiya Dixci   / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம் கீத்

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட டைக் வீதியில் 17 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணியகத்தின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மூவருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று  (24)  25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

டைக் வீதியிலுள்ள மக்களை வெளியே செல்ல வேண்டாம் எனவும் வேறு இடத்தில் இருந்து செல்பவர்கள் உள் நுழைய வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக  பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X