2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

திருகோணமலையில் 18 வீடுகள் சேதம்

Princiya Dixci   / 2021 மே 28 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கடும் காற்றுக் காரணமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ், இன்று (28)தெரிவித்தார்.

இதனால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, கந்தளாய் பிரதேசத்தில் 5 வீடுகளும், சேருவில பிரதேசததில் 8 வீடுகளும், குச்சவெளி பிரதேசத்தில் 3 வீடுகளும் தம்பலகாமம் பிரதேசத்தில் 2 வீடுகளும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X