2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் 71ஆவது தேசிய தினம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஜனவரி 28 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகமும் மாவட்டச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 71ஆவது தேசிய தினம், திருகோணமலை, பிரெட்றிக்  கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையில், பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், நிகழ்வில், முப்படையினரதும் மாணவர்களதும் அணிவகுப்புகள் இடம்பெறவுள்ளன.

இந்நாட்டின் சுதந்திர தினம், அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ஆம் உறுப்புரைக்கமைய, தேசிய தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், இம்முறை கொண்டாடப்படவுள்ள 71ஆவது சுதந்திர தினம், தேசிய தினமென்றே அழைக்கப்படுமென்றும் இனிவரும் காலங்களிலும், அந்த வார்த்தைப் பிரயோகமே பயன்படுத்தப்படுமென்றும், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X