Editorial / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லையென, திருகோணமலை பொது வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் அனுராத ஜயதிலக தெரிவித்தார்.
கொரோனா என சந்தேகத்தின் பேரில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 07 நோயாளர்களின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, எவருக்கும் கொரோனா தொற்று இருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பேஸ்புக் ஊடாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், இது தொடர்பில் வைத்திய நிபுணர் தெளிவுபடுத்தினார்.
70 வயதுடைய பெண்ணொருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த போது, அவருடைய மாதிரிகள் மட்டக்களப்பு, அநுராதபுரம் போன்ற இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டிருந்ததாகவும் இதனையடுத்து கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் அனுராத ஜயதிலக தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ச்சியாக சந்தேகமான நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்படுமாறும் சுகாதாரத் திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
43 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago