2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருகோணமலையில் நடைபவனியும் வீதி நாடகமும்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்,  எப்.முபாரக்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, திருகோணமலையில் நேற்று (18) நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

நடைபவனி, திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மக்களைச் சென்றடையும் விதத்தில் திருகோணமலை நகராட்சி மன்றக் கேட்போர் கூடத்தில் நிறைவடைந்தது.

“சர்வதேச மனித உரிமைகள் திட்டத்தின் எழுபதாவது சர்வதேசப் பிரகடனம்” எனும் தொனிப்பொருளில், இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக, திருகோணமலை மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை, மனித உரிமைகள் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான வீதி நாடகங்கள், திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்னால் அரங்கேற்றப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X