Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகமம், குச்சவெளி ஆகிய பிரதேசங்களுக்குப் புதிதாக இரண்டு கல்வி வலையங்களை உருவாக்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளனவென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இது குறித்து, ஊடகங்களுக்கு அவர் விளக்கமளிக்கையில், நாடளாவிய ரீதியில் புதிதாக உருவாக்கப்படவுள்ள 200 கல்வி வலயங்களில், இந்த இரண்டு வலயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என்றார்.
இதற்காக, 2017ஆம் ஆண்டு தொடக்கம் தன்னால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இறுதிக்கட்டதை அடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், கல்வியமைச்சின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் செயல்திறன் மீளாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலாநிதி மதுரா பேகலவின் பங்களிப்புடன், கல்வியமைச்சில் கடந்த வாரம் இடம்பெற்றிருந்ததாகவும், எம்.பி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2025