2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருகோணமலையில் புத்தகக் கண்காட்சி

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

சர்வதேச புத்தகத் தினத்தை முன்னிட்டு, புத்தகக் கண்காட்சியொன்று, திருகோணமலை நகராட்சி மன்றப் பொது நூலக கேட்போர் மண்டபத்தில், நாளை (04) தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை (06) வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடைபெறவுள்ளது.

திருகோணமலை நகரசபையின் தலைவர் நா.இராசநாயகம் தலைமையில் இடம்பெறும் இக்கண்காட்சியில், உப தலைவர் சே. ஸ்ரீஸ்கந்தராஜா, செயலாளர் தே.ஜெயவிஸ்ட்னு, பிரதம நூலகர் க.வரதகுமார், நூலகர் சி.கேசவச்செல்வி, நூலக உதவியாளர்கள், ஊழியர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட 800,000 ரூபாய் பெறுமதியான நூல்களும், திருகோணமலை மாவட்ட படைப்புகள் உள்ளடங்காக ஈழத்துப் படைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச புத்தகத் தினம், ஏப்ரல் 23ஆம் திகதியாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .