2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருட்டு குற்றச்சாட்டு; இருவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 நவம்பர் 12 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரை, இம்மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று (12) உத்தரவிட்டார்.

நெல்சன்புர, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 17, 20 வயது இளைஞர்கள்  இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து மடிக்கணினி, இலத்திரனியல் உபகரணங்கள், பெருமதியான புகைப்படக் கருவி போன்ற பொருட்களைக் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X