Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில், சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 67 பேரிடம் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது.
பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலுக்கமைவாக, திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை மின்சார சபையினரும் பொலிஸாரும் இணைந்து, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் மேற்படி நபர்களிடமிருந்து 3,437,559 ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாகவும், அவ்வலுவலகம் தெரிவித்தது.
இலங்கை மின்சார சபையில் அனுமதி பெறாமல் திருட்டுத் தனமாக கொக்கை மூலமாகவும் மின்சார சபையால் பொருத்தப்பட்டிருக்கின்ற மீட்டர் இயந்திரத்துக்குள் மோசடி செய்யும் வகையில், புதிய கம்பிகளைப் பொருத்தியும் மின்சாரத்தைப் பெற்றும் அதனைப் பாவிக்காமல் திருட்டுத் தனமாக மின் கம்பியைப் பொருத்தி மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலும் இந்த அபராதம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் தெரிவித்தது.
இதனடிப்படையில், மூதூர், சம்பூர், மொறவெவ, புல்மோட்டைப் பகுதிகளிலேயே இவை அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .