Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 09 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமிக்கப்பட்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர புதன்கிழமை (09) அன்று குறித்த நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு நகராட்சி மன்றமாக இருந்ததுடன் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டது.
இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த சிவராஜா தற்போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மாகாண விளையாட்டு துறை திணைக்கள பணிப்பாளர்,ஆளுநர் செயலக உதவி செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ஏ.எச் ஹஸ்பர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .