Freelancer / 2022 மார்ச் 02 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை – உவர்மலைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் (வயது 15) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மற்றவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான விசாரணைகளைத் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (K)
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025