2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலையில் எல்லை நிர்ணய குழு

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்துக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினர், எதிர்வரும் வியாழக்கிழமை (9) திருகோணமலைக்கு வருகை தரவுள்ளனர்.

அன்றைய தினம், மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணயம் தொடர்பாக திருமலை மாவட்ட பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான அமர்வு, மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் மாலை 2.30 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் தமது கருத்துகளையும் மும்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியுமெனவும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளை பிரித்தொதுக்குவது தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் ஏனைய பொதுமக்கள் அமைப்புகளும் பங்குகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X