2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு

Janu   / 2024 மே 07 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சிறுவர் நிதியத்திற்கு, ஜப்பான் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள், சிறுவர் நிதியத்தின் பங்காளரான சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றுள்ளது

இந்நிகழ்வில் குச்சவெளி, கோமரங்கடவலை, மொரவௌ பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த அறுபது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் , பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சிக்கான காசோலைகள் மற்றும் சுயதொழிலுக்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது .

திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரியரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக மாவட்டச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட செயலக ஊழியர்கள், மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள், திருகோணமலை மற்றும் திருகோணமலை வடக்கு கல்வி வலைய அதிகாரிகள் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

அ.அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X