2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘தென் திருமலை தேசம்’ வரலாற்று நூல் வெளியீடு

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

வைத்தியர், வரலாற்று ஆய்வாளர் அ.சதீஸ்குமாரின் “தென் திருமலை தேசம்” எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அரசரெத்தினம் அச்சுதன் தலைமையில், திருகோணமலை நகரசபை மண்டபத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 9.10 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழாவின் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான இணைப்பாளர் சண்முகம் குகதாசனும் கெளரவ விருந்திநர்களாக வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவனும்,  வைத்தியர் செ.செளந்தரராஜனும், சிறப்பு விருந்திநர்களாக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வி. குணபாலாவும், ஓய்வு நிலை அதிபர் அ.தில்லையம்பலமும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நூல் அறிமுகவுரையை கவிஞர் சு. சிவசங்கரன் (கொட்டிய ஆரன்) நிகழ்த்த, நூல் நயவுரையை ஆசிரியர் சி.பிரகாஷ், கவிஞரும் திருகோணமலை நகரசபை உறுப்பினருமான தில்லைநாதன் பவித்ரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .