2025 மே 01, வியாழக்கிழமை

தேர்தல் பணிக்கு விவரங்கள் சேகரிப்பு

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்கால தேர்தலுக்காக அரச சேவையிலுள்ள  அலுவலர்கள், பாவனைகேற்ற அரச வாகனங்கள் பற்றிய தரவுகளை, திருமலை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து அமைச்சு, திணைக்கள, நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையை, கிழக்கு மாகாணப் பிரதித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் அனுப்பிவைத்துள்ளார்

அதில், குறித்த சுற்றறிக்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி,  அமைச்சின், திணைக்களத்தின் அல்லது நிறுவனத்தின் அலுவலர் தொடர்பான விவரங்களை, செம்டெம்பர்  16ஆம் திகதிக்கு  முன்னர் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன்,  பாவனைக்கு உகந்த வாகனங்கள் தொடர்பான விவரங்களையும் அனுப்பிவைக்கும் படியும், அச்சுற்றிக்கையில் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .