Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 27 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிழக்கு மாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, கல்வியமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2016.12.06ஆம் திகதியன்று, 445 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது.
அதன்பின், கிழக்குமாகாணத்திலுள்ள தொண்டராசிரியர்களின் விவரங்களை நாம் மாகாண சபையிடம் கோரியதுக்கு அமைவாக, அவர்களால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் தெரிவுசெய்யப்பட்ட 456 பேரின் பெயர்கள், அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
ஆனால், மாகாண சபையால் எமக்கு நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அனுப்பாமல் வேறொரு பட்டியலே அனுப்பப்பட்டதால், அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு இறுதி நேர்முகத்தேர்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தீர்த்து, மாகாண சபையால் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கும் இறுதி நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப்பெற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இணைத்துக் கொள்ளப்படவேண்டிய தொண்டராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகருக்கும்படி நான் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய 811 தொண்டாரசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டது.
இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கான அமைச்சரவை அனுமதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
7 hours ago
02 May 2025