Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக் ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட்
கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்காக, மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவது சம்மந்தமாக, கல்வியமைச்சர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கிடையினான சந்திப்பு, கல்வியமைச்சின் அலுவலகத்தில் இன்று (08) காலை 10.45 மணியளவில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பிபோதே, கல்வியமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
இக்கலந்துரையாடலின் பின்னர், மேலதிக செயலாளர் ஹேமந்தவை உடனடியாகத் தொடர்புகொண்ட அமைச்சர், கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசியர்களின் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக, மாகாணத்திலுள்ள 700க்கு மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே 445 தொண்டர் ஆசியர்களின் நியமனங்களுக்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .