2025 மே 14, புதன்கிழமை

தொற்று வீழ்ச்சி; பராமரிப்பு நிலையத்துக்கு பூட்டு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவு நடுத்தீவில் இயங்கி வந்த கொரோனா இடைக்காலப் பராமரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

திருகோணமலைப் பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கிண்ணியா வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகருக்கு அனுப்பியுள்ள கடித்தின் மூலம் இந்த நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதனால் இந்தப் பராமரிப்பு நிலையத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடு இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X