2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தொல்பொருள் கடத்தல் முறியடிப்பு; இருவர் கைது

Editorial   / 2021 டிசெம்பர் 19 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்  

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான  தொல்பொருள்  கிண்ணம் ஒன்றைக் கடத்த முற்பட்ட இருவரை, நேற்று (18) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த பொருள் மீட்கப்பட்டு, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என  கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இவர்கள் இருவரும் மேற்குறித்த பொருளுடன் கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரத்தை  அண்மித்த பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள், கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடையவர்கள் என்றும் குறித்த பொருள் தொடர்பான  தொல்பொருள் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X