Editorial / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
“தொழில் முயற்சிக்கான சந்தை - 2018” எனும் தொனிப் பொருளில் மாபெரும் தொழில் சந்தை மற்றும் விற்பனை உள்ளிட்ட கண்காட்சிகள் தொடர்ச்சியாக மூன்று நாள்கள், திருகோணமலை செல்வநாயக புரத்திலுள்ள கிழக்கு மாகாண கைத் தொழில் திணைக்கள வளாகத்தில் எதிர்வரும் 09, 10, 11 ஆகிய தினங்களில் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, வர்த்தக வாணிப, கைத் தொழில் அமைச்சு, திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம், கிழக்கு மாகாண கைத் தொழில் திணைக்களம், சுற்றுலா பணியகம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.
அன்றைய முதல் நாளில் திருகோணமலை கடற்படையில் உள்ள மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடும் நடைபெறவுள்ளது.
“யுனெஸ்கோ எபீட்” நிறுவனம் மற்றும் தேசிய கைத் தொழில் அபிவிருத்தி அதிகார சபை இணைந்து இதனை நடாத்தவுள்ளது. இதில், சர்வதேச நாடுகளை சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், கல்வியலாளர்கள், தொழில் முனைவோர்கள் பங்கு பற்றவுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து, கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு அன்றைய தினமே மாலை 2.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படும்.
26 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
44 minute ago