2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தோப்பூரின் முதல் பெண் சட்டத்தரணி

Editorial   / 2021 நவம்பர் 17 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - தோப்பூரைப் பூர்வீகமாகவும் மூதூரை வசிப்பிடமாக கொண்ட முகம்மது அலி பாத்திமா மன்ஸிபா கடந்த 15ஆம் திகதியன்று, இலங்கை உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர், தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரியுமாவார்.

இவ்வாறு சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்ட இவர், தோப்பூரின் முதல் பெண் சட்டத்தரணி என்பது விசேட அம்சமாகும்.

பாத்திமா மன்ஸிபா, தனது  பதவி மூலம் நமது நாட்டுக்கும் மக்களுக்கும்,  இன, மத பேதமின்றி தொடர்ந்தும் மகத்தான சேவை புரியவும், மென்மேலும் பதவியுயர்வு அடையவும் பிரதேச மக்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X