2025 மே 05, திங்கட்கிழமை

தோப்பூரில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Princiya Dixci   / 2021 மே 25 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருந்த போதிலும் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் இன்றைய தினம் (25) மூடப்பட்டிருந்தன.

தோப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதற்காக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற தோப்பூர் கொரோனா தடுப்புச் செயலணியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே, தோப்பூரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

தோப்பூர் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா, வர்த்தக சங்கம் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மேற்படி கலந்துகொண்டு கடைகளை மூடுவதற்கு கூட்டாகத் தீர்மானித்திருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X