Princiya Dixci / 2021 மே 24 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீட்
கொவிட் 19 தொற்று வேகமாக பரவிவரும் தோப்பூர் பிரதேசம் உடனடியாக முடக்கப்பட வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் திருகோணமலை மாவட்டச் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடித்ததிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“தோப்பூர் பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வருகிறது. மூன்றாம் அலையில் இதுவரை 117 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 8 நாட்களில் மட்டும் 82 தொற்றாளர்கள் இனம் காணப்படுள்ளமை இப்பகுதியில் தொற்று வேகமாக பரவி வருகிறது என்பதைக் காட்டுகிறது.
“இதில் அல்லை நகர் மேற்கில் 37 தொற்றாளர்களும் அல்லை நகர் கிழக்கில் 36 தொற்றாளர்களும் தோப்பூரில் 33 தொற்றாளர்களும் இக்பால் நகரில் 05 தொற்றாளர்களும் பாலதோப்பூரில் 06 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
“சுமார் 14,000 மக்கள் வாழும் பகுதியில் குறுகிய காலத்தில் 117 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை இப்பகுதியின் அபாய நிலையைக் காட்டுகிறது.
“இப்பிரதேசத்தை இதுவரை முடக்காமல் இருப்பது தொற்று மேலும் பரவவே வழி வகுக்கும். எனவே, இப்பிரதேசத்தை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதேச சிவில் சமூகத்தினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“இது தொடர்பாக ஆராய்ந்து, இப்பிரதேசத்தை உடனடியாக முடக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026