2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘தோப்பூர் மக்களின் கோரிக்கை நியாயமானது’

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட் 

தோப்பூர் பிரதேசத்துக்குத் தனியான பிரதேச செயலகம் கோரும் தோப்பூர் மக்களின் கோரிக்கை நியாயமானதென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

தோப்பூர் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது தொடர்பிலான கலந்துரையாடல், தோப்பூரில் நேற்று (17) மாலை இடம்பெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

தோப்பூர் ஜம்மியத்துல் உலமா சபை, இளைஞர்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், நாட்டிலுள்ள உப பிரதேச செயலகங்களைத் தரமுயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் தாக்கல் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக, இம்ரான் எம்.பி தெரிவித்தார்.

இந்நிலையில், தோப்பூர் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது தொடர்பில், பிரதமர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆகியோரது கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .