தீஷான் அஹமட் / 2019 மார்ச் 26 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட, தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில், உயர்தரப் பிரிவில் வர்த்தக, விஞ்ஞான, கணிதத் துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென, கல்லூரி சமூகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் கடந்துள்ள போதும் இன்னும் உயர்தரப் பிரிவில், கலைத்துறை மாத்திரமே காணப்படுகின்றது. ஏனைய துறைகளைக் கற்க வேண்டுமாக இருந்தால், 50 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள திருகோணமலை நகருக்கும், 150 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள அம்பாறை மாவட்டத்துக்குமே, தோப்பூர் மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளனர்.
எனவே, இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் உயர்தரப் பிரிவில் வர்த்தக, விஞ்ஞான, கணித துறைகளை ஆரம்பிக்க முன்வர வேண்டுமென, கல்லூரி சமூகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
55 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago