Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
காணி விவகாரம் தொடர்பில், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமைக்காகக் கைதுசெய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் செல்ல, திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம். அப்துல்லா, இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.
குச்சவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயாநகரில்; ஏற்கெனவே, மாவட்ட நீதிமன்றத்தால் காணியை விட்டுவெளியேறுமாறு தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில், காணியை விட்டு வெளியேற மூவர் மறுத்துவருவதாக, பொலிஸார், நேற்றுப் புதன்கிழமை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்துமாறு, நீதிபதி, பிடிவிறாந்து பிறப்பித்தார்.
அதற்கிணங்க, மூவரும் கைது செய்யப்பட்டு, குச்சவெளிப் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டபோதே இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி, அவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்ததோடு, வழக்கை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .