Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம், எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, கோமரங்கடவெல வடக்கு வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி, திரியாய் சந்தியில் திருகோணமலை -புத்தளம் பிரதான வீதியை மறித்து பொதுமக்கள்; நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு 120 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதில் கோமரங்கடவெல சிங்கள மகா வித்தியாலயத்துக்கு 28 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால், தற்போது 16 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்குமாறும் பல தடவைகள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடமும் அரசியல்வாதிகளிடமும் தெரியப்படுத்தியதாகவும் ஆனால், இதற்காக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இதற்கான நிரந்தரத் தீர்வை பெற்றுத் தராவிடின், உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்பாக நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026