2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரிக்கை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, வெருகல் பிரதேச வைத்தியசாலைக்கு, நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சேருவில தொகுதிக் கிளைக் கூட்டம், ஈச்சலம்பற்றில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது, அங்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரிடம், பிரதேச மக்கள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.  

மேலும், கடந்த சில மாதங்களாக நிரந்தர வைத்தியர் இல்லாத இப்பிரதேசத்தில், திடீரென ஏற்படும் விபத்துகளுக்குரிய சிகிச்சைகள் வழங்கப்படாது, அம்பியூலன்ஸ் மூலம், சேருவில வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதால், சில உயிரிழப்புகள் சம்பவிப்பதாக, மக்கள் சுட்டிக்காட்டினர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .