Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, சாந்திபுரம் விவசாய சங்கத்துக்கு சொந்தமான கட்டடத்தில் நெல் சந்தைப்படுத்தல் பிரிவினரால் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட நெல்லை கட்டடத்தின் ஜன்னலை உடைத்து நேற்றிரவு (01) காட்டு யானை உட்கொண்டுள்ளதாக விவசாய சங்கத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நொச்சிக்குளம்,சாந்திபுரம் பகுதிகளிலுள்ள விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டடமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பல அரசியல்வாதிகளிடமும் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கும் அறிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாந்திபுரம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago