2025 மே 23, வெள்ளிக்கிழமை

நிலக்கரி மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, மூதூர் கிழக்கு சம்பூரில் அமைய உள்ள நிலக்கரி மின் நிலையத் திட்டம் வேண்டாம் எனக் கோரி சம்பூர் மீள் குடியேற்ற கிராம மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சம்பூர் அரசடி விநாயகர் கோயிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக மட்ட பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனிடம் கையளித்து அவருடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X