2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நகையை திருப்பி கொடுக்காதவருக்கு அழைப்பாணை

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹாநகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தனது சகோதரரிடம்  திருமண வீட்டுக்குச் செல்வதற்காக வாங்கிய எட்டரை பவுண் தங்க நகையை திருப்பி கொடுக்காமையின் காரணமாக குறித்த 35 வயது நபருக்கு மூதூர் நீதவான் ஐ.என்.றிஸ்வான் இன்று வெள்ளிக்கிழமை அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டார்.

குறித்த நபர் கண்டிக்கு திருமண வீட்டுக்குச் செல்வதற்காக தனது சகோதரரிடம் எட்டரை பவுண் தங்க ஆபரணங்களை வாங்கியுள்ளார்.

நீண்ட நாட்கள் சென்றும் அவர் அதனை திருப்பிச் செலுத்தாமையின் காரணமாக, பாதிக்கப்பட்ட சகோதரர் மூதூர் சட்ட உதவி ஆணைக்குழுவிடம் சென்று மூதூர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த நிலையிலேயே குறித்த  நபருக்கு மூதூர் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .