Princiya Dixci / 2021 ஜூன் 09 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதேசங்கள், நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையால் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கந்தளாய், பதவிசிறிபுர, புல்மோட்டை மற்றும் சேருவில ஆகிய பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் அத்தியட்சகர் எல்.ஜே.லியனகே தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்பிலான அனுமதி கிடைத்தமை தொடர்பிலான கடிதங்களின் பிரதிகளை, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில புலன் அத்துகோரள மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நாட்டில் 100 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026