Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2017 நவம்பர் 12 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் இக்பால் நகர் பகுதியிலுள்ள வீடொன்றினுல் புகுந்து, ஆறு பவுண் தங்க நகைகளைத் திருடிய 22 வயதுடைய பெண்ணொருவர், நேற்றிரவு (11) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நகை திருட்டு போன வீட்டுக்கு, குறித்த பெண், முருங்கை காய் வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
முருங்கை முடிந்து விட்டதெனவும் நான் பக்கத்து வீட்டுக்குச் செல்லப் போகின்றேன் எனவும் வீட்டு உரிமையாளரான பெண் முருங்கை வாங்க வந்த பெண்ணிடம் தெரிவித்து விட்டு, அவர் பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய முருங்கைக்காய் வாங்க வந்த பெண், திறந்திருந்த வீட்டுக்குள் சூட்சுமமான முறையில் உட்புகுந்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.
வீட்டுச் சொந்தக்காரப் பெண், பக்கத்து வீட்டுக்கு சென்று வந்து பார்த்த போது, வீட்டினுல் யாரோ உள் நுழைந்தது போன்று தென்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் நகை வைத்திருந்த பெட்டியைப் பார்த்த போது, நகை திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
முருங்கை காய் வாங்க வந்த பெண்ணிண் மீது சந்தேகம் கொண்டு, இது விடயமாக மூதூர் பொலிஸில் உடனடியாக முறையிட்டதையடுத்து, சந்தேக நபரான பெண்ணிண் வீட்டுக்கு மூதூர் பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த பெண், தான் திருடியதை ஒப்புக்கொண்டு, நகையை, மூதூர் பொலிஸாரிடம் இதன்போது ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து பெண், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025